கடந்த சில தினங்களுக்கு முன்பாக வங்கக்கடலில் ஏற்பட்ட குறைவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்த நிலையில் அந்த கனமழையின் காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் அத்தியாவசிய தேவைகளை பெற முடியாமலும் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். எனவே தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு பகல் பாராது பாதிக்கப்பட்ட மக்களையும் மீட்டெடுத்து முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் போன்ற பல நடிகர்கள் தாமாகவே முன்வந்து உதவி செய்தனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் சிம்பு கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கியிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கின்றன. மேலும் தெலுங்கு மக்களுக்கு உதவி இருக்கும் முதல் தமிழ் நடிகர் சிம்பு தான் என்று பலரும் கமெண்ட் செய்து வருவதோடு அவரை பாராட்டியும் வருகின்றனர்.
- Advertisement -