பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். டைம் ட்ராவல் சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரபுவின் சகோதரி பவதாரணியின் மறைவு காரணமாக. சில நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் படக்குழுவினர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இலங்கை, ஹைதராபாத், ரஷ்யா போன்ற பகுதிகளில் படமாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் வெங்கட் பிரபு தற்போது வேறொரு பிளான் போட்டிருக்கிறாராம். அதன்படி வெங்கட் பிரபு, அவருடைய உதவியாளர்கள் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு கேரளாவிற்கு லொகேஷன் பார்க்க சென்றுள்ளாராம். விஜய் அழைத்து சென்றாள் ரசிகர்கள் திரண்டு விடுவார்கள் என்பதால் இவர் மட்டும் சென்றுள்ளாராம். ஆகையால் GOAT படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -