Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் நிறுவனம்!

‘விடாமுயற்சி’ படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் நிறுவனம்!

-

- Advertisement -

விடாமுயற்சி படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.'விடாமுயற்சி' படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் நிறுவனம்!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதேசமயம் இந்த படத்தின் டீசரும் ட்ரைலரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன. மேலும் இந்த படம் ஆனது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் 2025 பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வரும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. 'விடாமுயற்சி' படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் நிறுவனம்!ஏற்கனவே அஜித்தின் 61வது படமான துணிவு திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அஜித்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ