Homeசெய்திகள்சினிமாஎளிய மனிதர்களின் வாழ்வே அறம்.... 'திரு. மாணிக்கம்' படத்தின் திரை விமர்சனம்!

எளிய மனிதர்களின் வாழ்வே அறம்…. ‘திரு. மாணிக்கம்’ படத்தின் திரை விமர்சனம்!

-

- Advertisement -

சமுத்திரக்கனி நடிப்பில் இன்று (டிசம்பர் 27) வெளியான திரு. மாணிக்கம் படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம்.எளிய மனிதர்களின் வாழ்வே அறம்.... 'திரு. மாணிக்கம்' படத்தின் திரை விமர்சனம்!

நந்தா பெரியசாமி இயக்கியுள்ள திரு. மாணிக்கம் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, நாசர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி தனது மனைவி (அனன்யா) மற்றும் இரு மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மிடில் கிளாஸ் மனிதனின் குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சனைகளை போல் சமுத்திரகனியின் குடும்பத்திலும் மருத்துவ செலவு உள்ளிட்ட பண கஷ்டம் இருக்கிறது. இன்று திரையரங்குகளில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள்!ஆனாலும் சமுத்திரக்கனி தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து வருகிறார். அதன்படி லாட்டரி சீட்டு கடை ஒன்றை நடத்தி வருகிறார் சமுத்திரக்கனி. அப்போது அவருடைய கடைக்கு மனைவியின் மருத்துவ செலவு, மகளின் திருமணம் இவை அனைத்தையும் லாட்டரி சீட்டில் கிடைக்கும் பணத்தை வைத்து சரி செய்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டு வருகிறார் பாரதிராஜா. அப்போது லாட்டரி சீட்டை வாங்கும் போது பாரதிராஜாவின் பணம் காணாமல் போய்விடுகிறது. எனவே இந்த லாட்டரி சீட்டை எடுத்து வைக்குமாறும் நாளை இதனை வாங்கிக் கொள்வதாகவும் சமுத்திரகனியிடம் கூறுகிறார் பாரதிராஜா.எளிய மனிதர்களின் வாழ்வே அறம்.... 'திரு. மாணிக்கம்' படத்தின் திரை விமர்சனம்! உடனே சமுத்திரக்கனையும் அந்த லாட்டரி சீட்டை பாரதிராஜாவிற்காக எடுத்து வைக்கிறார். மறுநாள் பாரதிராஜா எடுத்து வைத்த லாட்டரி சீட்டுக்கு ரூ 1.5 கோடி லாட்டரி அடிக்கிறது. எனவே இந்த லாட்டரி சீட்டை பாரதிராஜாவிடம் ஒப்படைக்க வேண்டும் என சமுத்திரக்கனி கிளம்ப அதற்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இந்த லாட்டரி சீட்டை நாமே எடுத்துக் கொள்ளலாம் என கூறுகின்றனர். ஆனால் சமுத்திரக்கனி, பாரதிராஜாவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்து, நேர்மையுடன் நடந்து கொள்கிறார். இதன்பின் சமுத்திரக்கனி வாழ்வில் சந்தித்த பிரச்சனைகள் என்ன? நேர்மையாக இருந்தால் என்ன நடக்கும்? என்பது தான் திரு. மாணிக்கம் படத்தின் மீதிக்கதை.எளிய மனிதர்களின் வாழ்வே அறம்.... 'திரு. மாணிக்கம்' படத்தின் திரை விமர்சனம்!

அதாவது இந்த படத்தில் பணத்திற்காக மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள்? பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்பதைப் போல பணத்திற்காக மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை மிக அழுத்தமான திரைக்கதையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் நந்தா பெரியசாமி. அந்த வகையில் படத்தில் எந்தவித தொய்வுகளும் இல்லாமல் திரைக்கதையை நகர்த்தியுள்ளார் படத்தின் இயக்குனர். அதேபோல் பணத்தைவிட மனிதநேயமும் நேர்மையும் தான் முக்கியம் என்பதை தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளார் சமுத்திரக்கனி. இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுகிறார்.எளிய மனிதர்களின் வாழ்வே அறம்.... 'திரு. மாணிக்கம்' படத்தின் திரை விமர்சனம்!எமோஷனல் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் ஓர்க் அவுட் ஆகி இருக்கிறது. பாரதிராஜா, தம்பி ராமையா, அனன்யா ஆகியோர் தங்களின் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவைகளும் அருமையாக அமைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மொத்தத்தில் அழுத்தமான திரைக்கதையில் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது இந்த திரு. மாணிக்கம்.

MUST READ