spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாகும் 'தக் லைஃப்'.... சிறப்பு காட்சிக்கு அனுமதி!

நாளை வெளியாகும் ‘தக் லைஃப்’…. சிறப்பு காட்சிக்கு அனுமதி!

-

- Advertisement -

தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நாளை வெளியாகும் 'தக் லைஃப்'.... சிறப்பு காட்சிக்கு அனுமதி!கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படம் நாளை (ஜூன் 5) தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். கமல்ஹாசன் தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் படம் வெளியாவதற்கான ஏற்பாடுகள் முழுவதும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்படம் டிக்கெட் முன்பதிவிலும் மாஸ் காட்டி வருகிறது.நாளை வெளியாகும் 'தக் லைஃப்'.... சிறப்பு காட்சிக்கு அனுமதி! இந்நிலையில் தமிழகத்தில் இந்த படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அதேசமயம் இந்த படத்தை சட்டவிரோதமாக செயல்படும் 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ