spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடைட்டானிக் நடிகர் உயிரிழப்பு... ஹாலிவுட் திரையுலகில் அதிர்ச்சி...

டைட்டானிக் நடிகர் உயிரிழப்பு… ஹாலிவுட் திரையுலகில் அதிர்ச்சி…

-

- Advertisement -
உகலக் புகழ் பெற்ற டைட்டானிக் திரைப்படத்தில் நடித்தவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 79. உலகம் முழுவதும் இன்று வரை பிரபலமாகவும், சினிமாவின் அடையாளமாகவும் மாறி இருக்கும் டைட்டானனிக் திரைப்படத்தில் கேப்டன் எட்வார்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் பெர்னார்ட். டைட்டானிக் தவிர தி லார்ட் ஆப் தி ரிங்ஸ் மற்றும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என இந்திய ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம்.

we-r-hiring
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். உடல் நலப்பிரச்சனைக்கு நீண்ட நாட்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலன் இல்லாமல் அவர் திடீரென உயிரிழந்தார். இது ஹாலிவுட் ரசிகர்கள் மற்றும் நடிகர்,, நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவு குறித்து குடும்பத்தினர் இதுவரை எந்த தகவலும் அளிக்கவில்லை. அவருடன் பணிபுரிந்த, பார்பரா டிக்சன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது பதிவில், பெர்னார்ட் உயிரிழந்தார் என்ற தகவலை துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் இருவரும் பல நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றி உள்ளோம். அவருடன் இணைந்து பணியாற்றியது அருமையான அனுபவம் என்றும், அவரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ