டொவினோ தாமஸ், மலையாள சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராவார். இவர் தமிழில், கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பாக வெளியான 2018 படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் டொவினோ தாமஸ். இப்படத்திற்குப் பிறகு டொவினோ தாமஸ் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
அதன்படி நடிகர் திலகம் எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் டொவினோ தாமஸ். இந்தப் படத்தை லால் ஜே ஆர் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தில் டொவினோ தாமஸ், பாவனா, சௌபின் சாகிர் மற்றும் பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை பட குழுவினர் வெளியிட்டு கவனம் பெற்றனர். மேலும் சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி இப்படம் 2024 மே மாதம் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.