spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிரிஷா - மன்சூர் விவகாரம்... போலீஸின் கடிதத்திற்கு திரிஷாவின் பதில்?

திரிஷா – மன்சூர் விவகாரம்… போலீஸின் கடிதத்திற்கு திரிஷாவின் பதில்?

-

- Advertisement -

திரிஷா - மன்சூர் விவகாரம்... போலீஸின் கடிதத்திற்கு திரிஷாவின் பதில்?சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான், நடிகை திரிஷா பற்றி கூறிய சமூக வலைத்தள பேட்டி ஒன்று வைரலானது. அவருடைய பேச்சு அநாகரிகமாக இருந்தது எனக்கூறி பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புகள் எழுப்பப்பட்டது. குஷ்பூ உள்ளிட்ட பல நடிகர்கள் இக்கருத்தில் மன்சூர் அலிகானை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டது. அதன்படி டிஜிபி சங்கர் ஜிவாலின் நடவடிக்கையால் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்கு பதிந்தது. விசாரணைக்கு அழைத்து மன்சூருக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்றுக் கொண்ட மன்சூர் அலிகான் காவல் நிலையம் சென்று, பின்னர் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாகும் அறிக்கை வெளியிட்டார். த்ரிஷாவும் அதற்கு மன்னிப்பு ஏற்றுக் கொள்வது போன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதோடு பிரச்சினை முடிந்து விட்டது என சுற்றுவட்டத்தார் பெருமூச்சு விட்ட நிலையில் மன்சூர் அலிகான், திரிஷாவின் மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக எச்சரித்து அறிக்கை வெளியிட்டார். திரிஷா - மன்சூர் விவகாரம்... போலீஸின் கடிதத்திற்கு திரிஷாவின் பதில்?இதனிடையே இந்த பிரச்சனை தொடர்பாக திரிஷாவுக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக விளக்கம் கேட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு உரிய நேரத்தில் விளக்கம் அளிக்காமல் த்ரிஷா தாமதித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. திரிஷா எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள திரிஷா“மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்” என்று காவல்துறைக்கு பதில் அளித்துள்ளார்.

MUST READ