Homeசெய்திகள்சினிமாவைபவ் நடிக்கும் 'பெருசு'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வைபவ் நடிக்கும் ‘பெருசு’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

வைபவ் நடிக்கும் பெருசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வைபவ் நடிக்கும் 'பெருசு'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் வைபவ் தமிழ் சினிமாவில் கோவா, மங்காத்தா போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் மேயாத மான், கப்பல், லாக்கப், மலேசியா டு அம்னீசியா, ரணம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா 2025 மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வர தயாராக வருகிறது. இதற்கிடையில் இவர் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பில் உருவாகியுள்ள பெருசு எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் வைபவுடன் இணைந்து சுனில், ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். சத்ய திலகம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க அருண் ராஜ இதற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படமானது இறுதி சடங்கு சம்பந்தமான கதைக்களத்தில் காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ