- Advertisement -
நடிகர் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார். போடா போடி திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவர் திரைத்துறையில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து,பாலா இயக்கிய தாரை தப்பட்டை உள்பட அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மொழியிலும் அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். கதாநாயகியாக மட்டுமன்றி வில்லி வேடத்திலும் நடித்து அசரடித்தவர் நடிகை வரலட்சுமி. சர்கார் படத்தில், இவர் விஜய்க்கு வில்லியாக நடித்து தூள் கிளப்பினார் நடிகை வரலட்சுமி. அடுத்து விஷால் நடித்த சண்டைக்கோழி 2 படத்திலும் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்திருந்தார்.




