வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Maximum Fun 😁!
Maximum Entertainment Loading🥳!!#VelsNext Surprise Announcement at 6 P.M. today🤓 pic.twitter.com/igoQMv88o5
— Vels Film International (@VelsFilmIntl) September 23, 2024
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் பல பெரிய படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதன்படி பல பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்து வரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்ததாக ஜெயம் ரவியின் ஜீனி, மூக்குத்தி அம்மன் 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளது. அடுத்ததாக 2018 பட இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவுள்ள புதிய படத்திணையும் தயாரிக்க இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின் படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்நிறுவனம் இன்று (செப்டம்பர் 23) மாலை 6 மணி அளவில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இது என்ன அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களை விவாதித்து வருகின்றனர். வேடிக்கை நிறைந்த அறிவிப்பாக இருக்கும் என்று வேல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு மிர்ச்சி சிவாவின் சுமோ திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் சுமோ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது எஸ் பி ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் சுமோ. இந்த படத்திற்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.