spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் அண்ணனோட ஃபேன் பாய் சம்பவத்தை முதல்முறையா பாக்குறேன்... இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி!

விஜய் அண்ணனோட ஃபேன் பாய் சம்பவத்தை முதல்முறையா பாக்குறேன்… இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி!

-

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள விஜயின் புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் கூட்டணி அமைக்கிறார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் மும்பரமாக நடந்து வருகின்றன.
படத்தில் விஜயின் தோற்றத்தை நவீன முறையில் வேறுபடுத்தி காட்டுவதற்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்று உள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

we-r-hiring

அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பத்தில் விஜயின் தோற்றத்தை டெஸ்ட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெங்கட் பிரபு, தளபதி விஜயின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “என் வாழ்க்கையில் முதன்முறையாக அண்ணன் விஜய்யின் ஃபேன் பாய் தருணத்தை நான் பார்த்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதில் ஹாலிவுட் நடிகர் டான்சல் வாஷிங்டன் நடிக்கும் காட்சிக்கு விஜய் கைகளை விரித்து வா தலைவா என்ற வகையில் பரவசத்துடன் காணப்படுகிறார்.

தற்போது விஜய் ரசிகர்கள் அனைவரும் யார் இந்த ஹாலிவுட் நடிகர் என்று தேட ஆரம்பித்து அவரது படங்களை லிஸ்ட் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

MUST READ