பழம்பெரும் மலையாள நடிகர் மாமுக்கோயா இன்று காலமானார். அவருக்கு வயது 76.
நாடக கலைஞராக வாழ்வைத் துவங்கிய மாமுக்கோயா அதையடுத்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 1979-ல் வெளியான ‘அன்யாருடே பூமி’ படத்தின் மூலம் சினிமாவின் அறிமுகம் ஆனார். மாமுக்கோயாடீ தற்போது வரை சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்து மலையாள திரைத்துறையின் பழம்பெரும் நடிகராக வலம் வந்துள்ளார்.
நாடோடிக்கட்டு, பட்டணப்பிரவேசம், உன்னிகளே ஒரு கதை பறையாம், வடக்குநோக்கியந்திரம், கிரீடம், ஒப்பம், உஸ்தாத் ஹோட்டல், ஷார்ஜா டூ ஷார்ஜா, வெட்டம், ஒரு மருபூமி கதை, மின்னல் முரளி, தீர்ப்பு உள்ளிட்ட படங்களில் மாமுக்கோயா சிறப்பாக நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றபோது மாமுக்கோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
மாமுக்கோயா மறைவை அடுத்து மலையாள திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.