spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு நான் பொறுப்பேற்க முடியாது.... 'வாடிவாசல்' குறித்து வெற்றிமாறன்!

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு நான் பொறுப்பேற்க முடியாது…. ‘வாடிவாசல்’ குறித்து வெற்றிமாறன்!

-

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படம் குறித்து பேசி உள்ளார்.ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு நான் பொறுப்பேற்க முடியாது.... 'வாடிவாசல்' குறித்து வெற்றிமாறன்!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன் கடைசியாக விடுதலை பாகம் 2 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதற்கிடையில் இவர், சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே போகிறது.ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு நான் பொறுப்பேற்க முடியாது.... 'வாடிவாசல்' குறித்து வெற்றிமாறன்! இருப்பினும் வருகின்ற ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஒவ்வொரு பேட்டிகளிலும் அப்டேட் கொடுத்து வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படம் அறிவித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன போதிலும் எதிர்பார்ப்பு குறையாமல் இருக்கிறது.

we-r-hiring

இந்நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வெற்றிமாறன், “எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பல்ல. அந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. என் படங்களை உருவாக்கும் போது என்னுடைய 100% கமிட்மெண்டை என்னால் கொடுக்க முடியும் அவ்வளவுதான்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ