spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசேனாபதியை சந்தித்த வேட்டையன்..... வைரலாகும் புகைப்படம்!

சேனாபதியை சந்தித்த வேட்டையன்….. வைரலாகும் புகைப்படம்!

-

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 இல் வெளியான இந்தியன் படத்தில் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சேனாபதியை சந்தித்த வேட்டையன்..... வைரலாகும் புகைப்படம்!இந்த படம் இந்தியன் படத்தின் முதல் பாகத்தை போல் ஊழலுக்கு எதிரான கதைகளை உருவாகியுள்ளது. சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் தயாராகி இருக்கும் நிலையில் இந்த படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் ட்ரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதே சமயம் நடிகர் ரஜினி, டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சேனாபதியை சந்தித்த வேட்டையன்..... வைரலாகும் புகைப்படம்!ஜெய் பீம் படத்திற்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே ரஜினி தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளார். மேலும் இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது.சேனாபதியை சந்தித்த வேட்டையன்..... வைரலாகும் புகைப்படம்!

we-r-hiring

இந்நிலையில் கமல்ஹாசன், ரஜினி ஆகிய இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். அதாவது கமல்ஹாசன் சேனாபதி லுக்கிலும், நடிகர் ரஜினி வேட்டையன் பட லுக்கிலும் காணப்படுகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ