Homeசெய்திகள்சினிமாஅப்படி போடு.... 'வேட்டையன்' படத்தின் டிரைலர் அறிவிப்பு வந்தாச்சு!

அப்படி போடு…. ‘வேட்டையன்’ படத்தின் டிரைலர் அறிவிப்பு வந்தாச்சு!

-

- Advertisement -

ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தில் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.அப்படி போடு.... 'வேட்டையன்' படத்தின் டிரைலர் அறிவிப்பு வந்தாச்சு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தினை டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். ஜெய் பீம் படத்திற்குப் பிறகு இவர் இயக்கும் திரைப்படம் என்பதால் வேட்டையன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் இந்த படம் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வருவதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகினி, கிஷோர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். லைக்கா நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக, அதாவது என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்படி போடு.... 'வேட்டையன்' படத்தின் டிரைலர் அறிவிப்பு வந்தாச்சு!அதே சமயம் படத்திலிருந்து மனசிலாயோ எனும் பாடலும் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படமானது வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ