Homeசெய்திகள்சினிமாஸ்பெயின் நாட்டிற்கு படையெடுக்கும் 'விடாமுயற்சி' படக்குழு.... எதற்காக தெரியுமா?

ஸ்பெயின் நாட்டிற்கு படையெடுக்கும் ‘விடாமுயற்சி’ படக்குழு…. எதற்காக தெரியுமா?

-

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.ஸ்பெயின் நாட்டிற்கு படையெடுக்கும் 'விடாமுயற்சி' படக்குழு.... எதற்காக தெரியுமா? மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கி வரும் நிலையில் ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார். மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் படத்தில் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படத்தின் படப்பிடிப்புகளும் அஜர்பைஜான் மற்றும் ஐதராபாத் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றனர். இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும் துணிவு படம் ரிலீஸாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் விடாமுயற்சி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஸ்பெயின் நாட்டிற்கு படையெடுக்கும் 'விடாமுயற்சி' படக்குழு.... எதற்காக தெரியுமா?ஆகையினால் படக்குழு விடாமுயற்சி திரைப்படத்தை எப்படியாவது தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று விடாமுயற்சியுடன் போராடி வருகிறது. இந்நிலையில் கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருப்பதாகவும் அதற்காக பட குழு ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல இருப்பதாகவும் புதிய தகவல் வெளிவந்துள்ளது. அனேகமாக இந்த பாடலானது அஜித் மற்றும் திரிஷா இருவருக்குமான காதல் பாடலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ