விடுதலை 2 படக்குழுவினர் படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து சேத்தன், கென் கருணாஸ், கௌதம் வாசுதேவ் மேனன், இளவரசு, ராஜிவ் மேனன் ஆகியோரம் நடித்திருந்தனர். இந்த படத்தை ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இசைஞானி இளையராஜா இதற்கு இசையமைத்திருந்தார். கடந்தாண்டு வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியிடப்பட்டது. அதன்படி இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. விடுதலை படத்தின் முதல் பாகம் சூரியை சுற்றி நகர்ந்த நிலையில் இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியை சுற்றி நகர்கிறது. அதன்படி விஜய் சேதுபதி எப்படி போராளியாக மாறுகிறார்? என்பதன் அடிப்படையில் இந்த திரைக்கதை நகர்ந்துள்ளது.
நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூலும் ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது. எனவே விடுதலை 2 படத்திற்கு கிடைத்த வெற்றியை வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, சேத்தன் ஆகியோர் மற்ற படக்குழுவினருடன் இணைந்து சிறப்பாக கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனை ரசிகர்களும் இணையத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.