spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநயன்தாராவின் திருமண ஆவணப்படம் விவகாரத்தில் தனுஷுக்கு அட்வைஸ் செய்த விக்னேஷ் சிவன்!

நயன்தாராவின் திருமண ஆவணப்படம் விவகாரத்தில் தனுஷுக்கு அட்வைஸ் செய்த விக்னேஷ் சிவன்!

-

- Advertisement -

நயன்தாராவின் திருமண ஆவணப்படம் விவகாரத்தில் தனுஷுக்கு அட்வைஸ் செய்த விக்னேஷ் சிவன்!இயக்குனர் விக்னேஷ் சிவன், போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாக இருந்தாலும் நானும் ரெளடி தான் திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதன் பின்னர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இவர்களின் திருமணத்திற்கு ஷாருக்கான், ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அடுத்தபடியாக நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ ஆவணப்படமாக வெளியாக இருக்கிறது. அதன்படி வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் Nayanthara: Beyond the fairy tale என்ற தலைப்பில் அந்த ஆவணப்படம் வெளியாக உள்ளது. எனவே சமீபத்தில் இது தொடர்பான ட்ரெய்லரும் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அந்த ட்ரெய்லரில் நானும் ரெளடி தான் படத்தின் பாடல் வரிகள் 3 வினாடி இடம் பெற்றிருந்தது. அதற்கு நானும் ரெளடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நயன்தாராவிடம் 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக நடிகை நயன்தாரா இன்று (நவம்பர் 16) தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் தானும் தன் கணவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மிக நீளமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனுஷ் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு தனுஷுக்கு அட்வைஸ் செய்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் நடிகர் தனுஷ், “யாரையும் வெறுக்க வேண்டாம். யாருக்குமே யார் நன்றாக இருந்தாலும் பிடிப்பதில்லை. வாழு வாழ விடு. அவ்வளவுதான். அன்பை மட்டுமே பகிருங்கள்” என்று ரசிகர்களுக்கு முன் பேசியிருக்கிறார். இந்த வீடியோவை குறிப்பிட்டு தனுஷ் தனது தீவிரமான ரசிகர்களை கருத்தில் கொண்டாவது அவருடைய போக்கு மாற வேண்டும் என பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ