spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஐசியு-வில் விஜய் ஆண்டனி பட நடிகை..... ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐசியு-வில் விஜய் ஆண்டனி பட நடிகை….. ரசிகர்கள் அதிர்ச்சி!

-

- Advertisement -

பிரபல நடிகை அருந்ததி நாயர் விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் அருந்ததி நாயர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். ஐசியு-வில் விஜய் ஆண்டனி பட நடிகை..... ரசிகர்கள் அதிர்ச்சி!தமிழில் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளியான பொங்கி எழு மனோகரா என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். அதைத்தொடர்ந்து பிஸ்தா, விஜய் ஆண்டனியின் சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விதார்த் நடிப்பில் கடந்தாண்டின் இறுதியில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற
ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்தில் நடித்துள்ளார் அருந்ததி நாயர்.மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று சாலை விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. கேரளாவில் இருசக்கர வாகனத்தில் சென்ற அருந்ததி நாயர் மீது கார் ஒன்று மோதியுள்ளது. ஐசியு-வில் விஜய் ஆண்டனி பட நடிகை..... ரசிகர்கள் அதிர்ச்சி!அக்கம் பக்கத்தினர் இதைக் கண்டு அருந்ததி நாயரை திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் ஐசியு வில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அருந்ததி நாயரின் உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தமிழ் மற்றும் கேரளா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ