விஜய் ஆண்டனியின் இசைக் கச்சேரி நடைபெறும் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி ஒரு இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் ககன மார்கன், வள்ளி மயில் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

ஆரம்பத்தில் ஒரு இசையமைப்பாளராக தனது திரைப் பயணத்தை தொடங்கிய இவர் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். எனவே தான் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்னை ஏஎம்ஜெயின் கல்லூரி மைதானத்தில் இசைக் கச்சேரி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் காவல்துறை இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்காததனால் இந்த இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதற்காக வருத்தம் தெரிவித்து பதிவு ஒன்றிடையும் வெளியிட்டிருந்தார் விஜய் ஆண்டனி. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி நடைபெறும் புதிய தேதியை விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். அதன்படி வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இசைக் கச்சேரி நடைபெறும் என தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.