Homeசெய்திகள்சினிமாமீண்டும் கூட்டணி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

மீண்டும் கூட்டணி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

-

- Advertisement -

மீண்டும் கூட்டணி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

தளபதி 68 படத்தின் இயக்குனர் குறித்து புதிய தகவல்? மாஸ் அப்டேட்டால் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!

மீண்டும் கூட்டணி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

இயக்குநர் அட்லீ – விஜய் கூட்டணி மீண்டும் ‘தளபதி 68’ படத்தில் இணைய உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கடலில் மூழ்கி உள்ளனர்.

2013ம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து அடுத்தடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கினார்.

மீண்டும் கூட்டணி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

அட்லீ-விஜய் கூட்டணியில் தமிழில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.

மீண்டும் கூட்டணி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, விஜய் சேதுபதி, ப்ரியாமணி மற்றும் யோகி பாபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ‘ஜவான்‘ படத்தை முடித்த கையோடு இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மீண்டும் கூட்டணி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் இரண்டு மொழிகளில் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு‘ படமும் இருமொழி படமாக வெளிவந்தது. அட்லீ-விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தை தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் கூட்டணி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா‘ படத்தை தயாரித்திருந்த இந்த தயாரிப்பு நிறுவனம் விஜய் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரியாக இருக்கிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், விரைவில் படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் கூட்டணி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், சாண்டி, பிக்பாஸ் ஜனனி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அட்லீ தெலுங்கில் ஜுனியர் என்டிஆர்-ஐ வைத்து இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அது குறித்தும் விரைவில் அப்டேட் வெளியாக உள்ளது.

MUST READ