spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தி கோட்' படப்பிடிப்பிற்காக மீண்டும் துபாய் பறந்த விஜய்..... கோஷமிட்ட ரசிகர்கள்!

‘தி கோட்’ படப்பிடிப்பிற்காக மீண்டும் துபாய் பறந்த விஜய்….. கோஷமிட்ட ரசிகர்கள்!

-

- Advertisement -

நடிகர் விஜய் லியோ படத்தில் மாபெரும் வெற்றிக்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'தி கோட்' படப்பிடிப்பிற்காக மீண்டும் துபாய் பறந்த விஜய்..... கோஷமிட்ட ரசிகர்கள்!இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி, அஜ்மல், வைபவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பாக வெளியான ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். 'தி கோட்' படப்பிடிப்பிற்காக மீண்டும் துபாய் பறந்த விஜய்..... கோஷமிட்ட ரசிகர்கள்!ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து வெளியான விசில் போடு பாடலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதற்கிடையில் இந்த படமானது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாடல் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் மட்டும் சென்னை திரும்பி இருந்தார்.

தற்போது மீண்டும் கோட் படப்பிடிப்புக்காக மீண்டும் துபாய் செல்கிறார் விஜய். அப்போது சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் சென்ற விஜயை கண்டு ரசிகர்கள் பலரும் விஜய் கோஷமிட்டனர். நடிகர் விஜய்யின் ரசிகர்களை கண்டு புன்னகைத்தபடி சென்றார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ