தமிழ் சினிமாவில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் ஆகியோரின் நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதை தொடர்ந்து இவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி அடுத்தடுத்த வெற்றி கண்டார். மேலும் இவர் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி இந்திய அளவில் பெயரையும் புகழையும் பெற்றார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு சென்ற இயக்குனர்களில், முதல் படத்திலேயே ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிய இயக்குனர் என்ற சாதனையை படைத்துள்ளார் அட்லீ. அடுத்ததாக இவர், அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில், ஹாலிவுட் தரத்தில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் அட்லீயின் மகத்தான சாதனைகளை பாராட்டும் வகையில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னையில் அமைந்திருக்கும் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழாவில் இயக்குனர் அட்லீக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது. இந்த தகவல் அறிந்த திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அட்லீக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அட்லீயுடன் இணைந்து மற்ற துறைகளை சார்ந்த சாதனையாளர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -