Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் 'மகாராஜா' ட்ரெய்லர் தாறுமாறு....அமீரும் வெற்றிமாறனும் கொடுத்த அப்டேட்!

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ ட்ரெய்லர் தாறுமாறு….அமீரும் வெற்றிமாறனும் கொடுத்த அப்டேட்!

-

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' ட்ரெய்லர் தாறுமாறு....அமீரும் வெற்றிமாறனும் கொடுத்த அப்டேட்!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக ஒரு பக்கம் நடித்தாலும் வில்லனாக இன்னொரு பக்கம் கலக்கி வருகிறார். அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம், ஷாருக்கானின் ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக மிரட்டி இருந்தார்.

தற்போது விஜய் சேதுபதி விடுதலை இரண்டாம் பாகத்திலும், ட்ரெயின் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் வில்லனாக இனி நடிக்க மாட்டேன் என்றும், ஹீரோவுக்காக தான் அடிக்கப்பட்ட காட்சிகள் மாற்றியமைக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்து இருந்தார்.விஜய் சேதுபதியின் 'மகாராஜா' ட்ரெய்லர் தாறுமாறு....அமீரும் வெற்றிமாறனும் கொடுத்த அப்டேட்!

இந்நிலையில் விஜய் சேதுபதி ஐம்பதாவது படமான மகாராஜா படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை இயக்குனர் வெற்றிமாறனும் அமீரும் கூறியுள்ளனர். அதன்படி சமீபத்தில் மோகன் ராஜா, அமீர், வெற்றிமாறன், அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் மகாராஜா படத்தின் டிரைலர் தரமாக உருவாக்கியுள்ளதாகவும், அதனைக் கண்டு மிரண்டு விட்டதாகவும் வெற்றிமாறனும் அமீரும் கூறி இருந்தார்கள். ஆகையால் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது. விரைவில் மகாராஜா படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரங்கு பொம்மை படத்தின் மூலம் பிரபலமான நிதிலன் தான் இந்த மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகந்தாஸ், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ