விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள வள்ளிமயில் படத்தின் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
பிரபல இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதேசமயம் செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிட்லர் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், விவேக் பிரசன்னா, சரண்ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இதற்கிடையில் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் எனும் திரைப்படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, பிரியா அப்துல்லா, அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தாய் சரவணன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இப்படம் அதிக பொருட்செலவில் வள்ளி திருமணம் நாடகத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், வள்ளி மயில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் இது டிரெண்டாகி வருகிறது.