spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'வீர தீர சூரன்' ரிலீஸுக்கு முன்பு எல்லாரும் பாராட்டுனாங்க.... ஆனா இப்படி ஆயிடுச்சு.... விக்ரம் வெளியிட்ட...

‘வீர தீர சூரன்’ ரிலீஸுக்கு முன்பு எல்லாரும் பாராட்டுனாங்க…. ஆனா இப்படி ஆயிடுச்சு…. விக்ரம் வெளியிட்ட வீடியோ!

-

- Advertisement -

சியான் விக்ரம் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.'வீர தீர சூரன்' ரிலீஸுக்கு முன்பு எல்லாரும் பாராட்டுனாங்க.... ஆனா இப்படி ஆயிடுச்சு.... விக்ரம் வெளியிட்ட வீடியோ!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி வீர தீர சூரன் திரைப்படம் வெளியானது. இரண்டாம் பாகமாக வெளியான இந்த படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அருண்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். துஷாரா, எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகள் தான் வெளியான இந்த படம் பல தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. அதே சமயம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று ரூ. 52 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். 'வீர தீர சூரன்' ரிலீஸுக்கு முன்பு எல்லாரும் பாராட்டுனாங்க.... ஆனா இப்படி ஆயிடுச்சு.... விக்ரம் வெளியிட்ட வீடியோ!அந்த வீடியோவில் அவர், “ஒரே ஒரு வாழ்க்கை. அதை வரலாறாக வாழ்ந்திரு என்று ஒருவன் ஈஸியா சொல்லிட்டு போய்ட்டான். ஆனால் இந்த வாழ்க்கை இருக்கிறதே ஏதாவது ஒரு பிரச்சனையை தூக்கி எறிந்து விட்டு போய்க்கிட்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக வீர தீர சூரன் படம் ரிலீஸுக்கு முன்பு, இந்த படம் மாஸா இருக்கு, இந்த வருஷத்தின் அருமையான படம் இது, என்று பலரும் பாராட்டினார்கள். ஆனால் அதன் பிறகு நடந்தது உங்களுக்கே தெரியும். இந்த படத்தை 4 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என்று கூறியது. இந்த மாதிரி பிரச்சனை ஆயிடுச்சு. இந்த படத்தை எப்படியாவது ரசிகர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நினைத்தோம். என்னால் முடிந்ததை நான் செய்தேன். ராவான, வித்யாசமான, எதார்த்தமான ஒரு படத்தை ரசிகர்களுக்கு கொடுக்கணும்னு நினைத்து இந்த படத்தில் நடித்தேன். பொதுவாக முதல் இரண்டு காட்சிகள் வெளியாகாமல் இருந்தாலே அந்த படம் அவ்வளவுதான். ஆனால் இந்த படம் வெளியான பிறகு தியேட்டருக்கு வந்த பார்த்த ஒவ்வொருவரும் இதற்கு முன்பு என்ன சொன்னார்களோ அதைவிட அதிகமாக பாராட்டினார்கள். குறிப்பாக குடும்பத்தினர் பயங்கரமாக இருக்கிறது, மாஸாக இருக்கிறது, என்ஜாய் பண்ணோம் என்று சொல்வதைக் கேட்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Vikram (@the_real_chiyaan)

we-r-hiring

இப்போது இந்த படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று உறுதியாக என்னால் சொல்ல முடிகிறது. அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இந்த படம் உங்களுக்காக பண்ண படம். நாங்கள் நினைத்தது நடந்தது. படம் பார்த்தவர்கள் என்ஜாய் பண்ணியிருப்பீங்க, பார்க்காதவர்கள் பார்ப்பீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ