Homeசெய்திகள்சினிமாவிக்ராந்த் நடித்துள்ள 'தீபாவளி போனஸ்'.... நாளை ஓடிடியில் வெளியீடு!

விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’…. நாளை ஓடிடியில் வெளியீடு!

-

- Advertisement -
kadalkanni

விக்ராந்த் நடித்துள்ள தீபாவளி போனஸ் திரைப்படம் நாளை (நவம்பர் 26) ஓடிடியில் வெளியாகிறது.

நடிகர் விக்ராந்த் தமிழ் சினிமாவில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். விக்ராந்த் நடித்துள்ள 'தீபாவளி போனஸ்'.... நாளை ஓடிடியில் வெளியீடு!அதைத் தொடர்ந்து கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக ஆகிய படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான பக்ரீத் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் எனும் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK 23 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விக்ராந்த். இதற்கிடையில் இவர் தீபாவளி போனஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விக்ராந்துடன் இணைந்து ரித்விகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜெயபால் இந்த படத்தை இயக்கியிருந்தார்.விக்ராந்த் நடித்துள்ள 'தீபாவளி போனஸ்'.... நாளை ஓடிடியில் வெளியீடு! ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படம் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ