பாஜக தலைவர் அண்ணாமலை பயோபிக்கில் விஷால்?… எழுந்தது புதிய சர்ச்சை….
- Advertisement -

ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பாக திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக, விஷால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடிக்கிறார். இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, முத்தையா இயக்கத்தில் மீண்டும் விஷால் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகர் விஷால், பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பாக போலீஸ் அதிகாரியாக பதவி வகித்தார். அதன்பிறகு தான் அவர் அரசியலுக்கு வருகை தந்தார். இதை மையப்படுத்தி, அவர் எவ்வாறு போலீஸ் அதிகாரியாக பதவி வகித்தார், தொடர்ந்து அவர் எவ்வாறு அரசியலுக்கு வருகை தந்தார் என்பதை படமாக்க உள்ளனர்.

இதனிடையே, அண்மையில் நடிகர் விஷால், அண்ணாமலை குறித்து பேசியிருந்தார். அப்போது, பாஜக அண்மைக் காலமாக அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. அப்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு, செயல்பாடு, மிகவும் சிறப்பாக உள்ளது. அவரது பொறுமை எனக்கு மிகவும் பிடித்துள்ளது என விஷால் கூறினார். அதனால், பாஜகவினரான அண்ணாமலையின் பயோபிக்கில் விஷால் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.