நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உருவெடுத்தார். இருப்பினும் கடைசியாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அடுத்ததாக விஷ்ணு விஷால், மோகன்தாஸ் ஆர்யன் என பல படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் இயக்குனர் கோகுல், அருண்ராஜா காமராஜ் ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதே சமயம் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் விஷ்ணு விஷால் நாளை (ஜூலை 17 அன்று) தனது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ள ஓர் மாம்பழ சீசனில் எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஷ்ணு விஷால். இந்த படத்தை ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்குகிறார். மேலும் அந்த போஸ்டரில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -