spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருமண நாளில் கிடைத்த பரிசு.... இரண்டாவது முறையாக தந்தையான பிரபல நடிகர்!

திருமண நாளில் கிடைத்த பரிசு…. இரண்டாவது முறையாக தந்தையான பிரபல நடிகர்!

-

- Advertisement -

பிரபல நடிகர் 40 வயதில் இரண்டாவது முறை தந்தையாகியுள்ளார்.திருமண நாளில் கிடைத்த பரிசு.... இரண்டாவது முறையாக தந்தையான பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் நடிகர் விஷ்ணு விஷால். அந்த வகையில் இவர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு எளிமையான கிராமத்து நாயகனாக நடித்து பலரின் மனதில் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து குள்ளநரி கூட்டம், ஜீவா, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல வித்தியாசமான படங்களை நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வரும் இவர் பல படங்களை தயாரித்தும் வருகிறார். மேலும் இரண்டு வானம், ஓர் மாம்பழ சீசனில் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் விஷ்ணு விஷால். இதற்கிடையில் கடந்த 2010 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் இருக்கிறார். இருப்பினும் விஷ்ணு விஷால் – ரஜினி நட்ராஜ் இருவரும் 2018ல் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து சென்றனர்.

we-r-hiring

அதைத்தொடர்ந்து இந்திய பேட்மின்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டாவை திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆர்யன் இப்போது மூத்த சகோதரன் ஆகிவிட்டான். இன்று எங்கள் 4வது திருமணநாள். அதே நாளில் இந்த பரிசை நாங்கள் வரவேற்கிறோம். உங்களின் அன்பும் ஆசிர்வாதமும் தேவை” என்று பதிவிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

MUST READ