Homeசெய்திகள்சினிமாசூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது.... வைரலாகும் பிரபல நடிகையின் பேச்சு!

சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது…. வைரலாகும் பிரபல நடிகையின் பேச்சு!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது.... வைரலாகும் பிரபல நடிகையின் பேச்சு!பிரபல மலையாள நடிகை பார்வதி தமிழ் சினிமாவில் பூ, மரியான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் விக்ரமுடன் இணைந்து தங்கலான் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் வருகின்ற ஜனவரி 26 இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை பார்வதி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விமர்சித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது , ” சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது. அது வேஸ்ட் ஆப் டைம். சூப்பர் ஆக்டர் அப்படிங்கற பட்டம் கிடைச்சா அதில் பெருமை இருக்கிறது. ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது” என்று பேசியுள்ளார்.சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது.... வைரலாகும் பிரபல நடிகையின் பேச்சு!

நடிகை பார்வதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தான் மறைமுகமாக விமர்சித்துள்ளார் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட அன்னபூரணி பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தாரா ‘லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீங்க எல்லாரும் திட்டுறாங்க’ என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விமர்சித்து பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ