தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த 2017 இல் தொடங்கப்பட்ட இத்திரைப்படம் 5 வருட கடின உழைப்பிற்கு பிறகு ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி அயலான் திரைப்படம் ஆனது வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் கருணாகரன், பால சரவணன், யோகி பாபு, இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். சயின்ஸ் செக்சன் கதைக்களத்தில் அயலான் ஒன சயின்ஸ் ஃபிக்ஷன் கதைக்களத்தில் ஏலியன் ஒன்றை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பாக படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளியானது.
மேலும் அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 26 மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் இயக்குனர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் மற்றும் பட குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் தயாரிப்பாளர் ராஜேஷ் ட்ரெய்லர் குறித்த அப்டேட் ஒன்றை கொடுத்திருந்தார். அதாவது ஜனவரி 5ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகும் என கூறியிருந்தார். இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -