இந்த ஆண்டு மீண்டும் தீபாவளி பண்டிகைக்கு விஜய், அஜித் படங்கள் ஒன்றாக வெளிவர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்தின் துணிவும், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானதில் இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதத்தில் தொடங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் விஜயும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த இரண்டு படங்களும் வரும் தீபாவளிக்கு வெளியானால் ரசிகர்களுக்கு தீபாவளி பண்டிகை அதிரடி சரவெடியாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? தீபாவளி வரை பொறுத்திருந்து பார்ப்போம்!!!