spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை மாளவிகா மேனன் பற்றி அவதூறு பரப்பிய இளைஞர் கைது 

நடிகை மாளவிகா மேனன் பற்றி அவதூறு பரப்பிய இளைஞர் கைது 

-

- Advertisement -

பிரபல மலையாள நடிகை மாளவிகா மேனன், தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயின் தங்கையாக நடித்தவர் நடிகை மாளவிகா மேனன்.

நடிகை மாளவிகா மேனன் பற்றி அவதூறு பரப்பிய இளைஞர் கைது 

we-r-hiring

 

இவர் ‘விழா’, ‘பிரம்மன்’, ‘வெத்துவேட்டு’, ‘பேய் மாமா’, ‘அருவா சண்ட’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் பற்றி சமூக வலைதளத்தில் சமீப நாட்களாக அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன.

இதுபற்றி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்த மாளவிகா, சமூக வலைதளங்களில் கண்ணியமற்ற முறையில் யாரை பற்றியும் எப்படியும் பேசலாம் என்கிற உரிமை இருப்பதாக நினைத்துக்கொண்டு சிலர் செயல்படுகிறார்கள் என தெரிவத்துள்ளார்.

மேலும் விழாவுக்கு என்ன டிரெஸ் அணிந்து வரப்போகிறீர்கள் என்று கூட பலர் ஃபோன் செய்து விசாரிப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் மாளவிகா மேனன் பற்றி அவதூறாகப் பதிவிட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் பாலக்காடு அட்டப்பாடியை சேர்ந்த ஸ்ரீஜித் ரவீந்திரன் (28) என்பவரை கொச்சி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மீண்டும் அஜித்தை இயக்க விரும்பும் பிரபல இயக்குனர்!

MUST READ