spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாயுவன் இசையில் விஜய் குரலில்..... பட்டைய கிளப்பும் GOAT பட பாடல்!

யுவன் இசையில் விஜய் குரலில்….. பட்டைய கிளப்பும் GOAT பட பாடல்!

-

- Advertisement -

நடிகர் விஜய் லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். யுவன் இசையில் விஜய் குரலில்..... பட்டைய கிளப்பும் GOAT பட பாடல்!இந்த படத்தை சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி ஏற்கனவே படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போது வெளியாகும் என்று ரசிகர் ஒருவர் கேட்டபோது விரைவில் வெளியாகும் என்று வெங்கட் பிரபுவும் அப்டேட் கொடுத்திருந்தார்.யுவன் இசையில் விஜய் குரலில்..... பட்டைய கிளப்பும் GOAT பட பாடல்! பின்னர் இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்று யுவன் சங்கர் ராஜா அப்டேட் கொடுத்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் நடிகர் விஜய், கோட் படத்தில் பாடியுள்ள பாடல் வேற லெவலில் வந்துள்ளதாம். லியோ படத்துக்காக நான் ரெடி தான் பாடலை விஜய் 1 மணி நேரத்தில் பாடி கொடுத்தாராம். ஆனால் கோட் படத்துக்காக நான்கு மணி நேரம் எடுத்துக்கொண்டாராம். இருப்பினும் இந்த பாடல் பட்டைய கிளப்பி வேற மாதிரி தயாராகி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடியுள்ள முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ