spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சிகை அலங்காரம் செய்ய வருபவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையா? கிடுக்கிப்பிடி விசாரணை…

சிகை அலங்காரம் செய்ய வருபவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையா? கிடுக்கிப்பிடி விசாரணை…

-

- Advertisement -

கொகைகன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர், சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிகை அலங்காரம் செய்வபவரும் சிக்கினார்.சிகை அலங்காரம் செய்ய வருபவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையா? கிடுக்கிப்பிடி விசாரணை…சென்னை கோடம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் பிரபல சிகை அலங்கார நிலையம் ((Green trends)) செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வருபவர் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் கஜேந்திரனை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் 18 கிராம் கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் தன்னிடம் சிகை அலங்காரத்திற்கு வரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

இந்த நிலையில் கஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தியதில், பெங்களூருவைச் சேர்ந்த தர்ஷன் என்பவர் மூலம் கொகைன் போதைப்பொருள் சப்ளை ஆகி இருப்பது தெரிய வந்தது. தர்ஷன் தலைமறைவாகிவிட்டார்.

மேலும் நடத்திய விசாரணையில், சென்னை கேகே நகரைச் சேர்ந்த வங்கி ஊழியர் விக்னேஷ், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஐடி ஊழியர் இர்பான், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் செல்வராஜ், ராயப்பேட்டையைச் சேர்ந்த பைசல் ஆகியோரும் கொகைன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 5 பேரும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அசோக் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இவர்களிடம் இருந்து மொத்தமாக 46 கிராம் கொகைன் போதைப்பொருளும், 6 கிராம் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘தி ராஜாசாப்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

MUST READ