spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி... கர்நாடகாவில் சோகம்!

ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி… கர்நாடகாவில் சோகம்!

-

- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிராவாரா பகுதியில் உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பீமண்ணா. விவசாயியான இவருக்கு எரம்மா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று பீமண்ணா ஆட்டிறைச்சி வாங்கி வந்து தனது குடும்பத்தினருடன் சமைத்து சாப்பிட்டுள்ளார்.ஆட்டிறைச்சி சாப்பிட்ட பின்னர் பீமண்ணா மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் - உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல்

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ராய்ச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பீமண்ணா, அவரது மனைவி எரம்மா மற்றும் 2 பிள்ளைகள் உயிரிழந்தனர்.மேலும் ஒரு பெண் உள்ளிட்ட 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பீமண்ணா குடும்பத்தினர் சாப்பிட்ட உணவின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். ஆய்வு முடிவுகள் வெளியான பின்னர் அவர்கள் உயிரிழப்புக்கு காலாவதியான இறைச்சி காரணமா? அல்லது உணவில் விஷம் கலக்கப்பட்டதா? என தெரியவரும் என போலிசார் கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ