spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சோழவரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது

சோழவரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது

-

- Advertisement -

சோழவரம் அருகே திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி டியோ கார்த்திக் உட்பட 4பேர் ஆந்திராவில் கைது. மேலும் இருவரை பிடித்து காவல்துறை விசாரணை.

சோழவரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் கைதுதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அபிஷா ப்ரியா வர்ஷினி என்பவரின் கணவர் ஜெகன்(38). இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

we-r-hiring

சோழவரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் கைதுநேற்று மாலை ஜெகனின் வீட்டுக்கு 2 இரு சக்கர வாகனங்களில் மாஸ்க் அணிந்து வந்த 5 பேர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இந்த நாட்டுவெடி குண்டு வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திமுக பிரமுகர் ஜெகனின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய அதே நபர்கள், சிறுனியம் பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வரும் வெங்கடேசன் என்பவரது மகன்களான சரண்ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோரது வீட்டுக்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவர்களது கார் மற்றும் தண்ணீர் கேன் வாங்க வந்தவர்களின் கார்களையும் அரிவாளால் வெட்டி, வீட்டின் ஜன்னல்களை அரிவாளால் வெட்டியும், நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் அவர்கள் சேதப்படுத்தி சென்றனர்.

சோழவரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் கைதுஇதேபோல, சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் வெடிகுண்டை வீசிய அந்த கும்பல், சத்தம் கேட்டு வெளியே வந்த லாரி ஓட்டுநர் சிவா என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் சோழவரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவங்கள் நடந்திருக்கலாம் எனவும், ரியல் எஸ்டேட் தொழில், கட்டுமான பொருள் சப்ளை செய்வோரிடம் ரவுடிகள் மாமூல் கேட்டு நாட்டு வெடிகுண்டு வீசினார்களா எனவம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை  ஆந்திரா விரைந்த நிலையில் பிரபல ரவுடி டியோ கார்த்திக் உட்பட 4பேரை கைது செய்துள்ளனர். டியோ கார்த்திக், சுரேஷ், விக்கி உட்பட 4பேரை ஆந்திராவில் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை தமிழ்நாடு அழைத்து வந்து கொண்டுள்ளனர்.

மேலும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான அஜீத்குமார், நித்தீஸ்வரன் ஆகிய இருவரிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் கைது செய்யப்பட்ட நபர்களை அழைத்து வந்து சோழவரம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ