spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்அம்பத்தூரில் 550 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

அம்பத்தூரில் 550 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

-

- Advertisement -

அம்பத்தூரில் 550 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் மணி தெருவில் அமைந்துள்ள பழைய மர குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்க வைத்திருப்பதாக செங்குன்றம் வனசரக அதிகாரி எடிசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

we-r-hiring

அதன் அடிப்படையில் அவரது தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை நடத்திய போது, 550 கிலோ எடை கொண்ட 3 லட்சம் மதிப்புள்ள 41 செம்மர கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 41 செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்த வனசரக அதிகாரிகள் அம்பத்தூர் எஸ்.வி நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வனை தங்களது அலுவலகம் அழைத்து சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அம்பத்தூரில் 550 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

அதில், அவர் திருவள்ளூர் பேரம்பாக்கம் பகுதியிலிருந்து 60ஆயிரம் ரூபாய்க்கு மொத்தமாக மரக்கட்டைகளை வாங்கி வந்ததாகவும், அப்போது அங்கு மாட்டு கொட்டையாக பயன்படுத்தப்பட்ட கட்டைகள் பார்ப்பதற்கு நன்றாக இருந்ததாகவும், அது செம்மர கட்டை என அறியாமலேயே அதனையும் சேர்த்து வாங்கி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூரில் 550 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

செம்மரக்கட்டைகளின் மதிப்பை தெரியாமல் அதனை மாட்டு கொட்டாயாக பயன்படுத்திய விவகாரம் வன சரக அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து தமிழ்செல்வனிடம் வனச்சரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ