கேரள மாநிலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
கேரள மாநிலம் கொல்லம் சாத்தனூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் நடைபெற்று வரக்கூடிய இடத்தில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரியத் துவங்கியது.
இதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதம் ஆனது.
அப்போது ஓட்டுநர் இருக்கையில் இருந்தபடியே ஒருவர் உயிரிழந்ததை கண்டறிந்தனர். உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.