spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

-

- Advertisement -
kadalkanni

காதலனுடன் சேர்ந்து  கணவனை கொலை செய்து நாடகம் ஆடிய மனைவி.போலீசார் விசாரனையில் உண்மை அம்பலம்.

சமூகத்தில் மனித உறவுகள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன.  திருமணத்திற்கு புறம்பான உறவுகளின் மோகத்தில் நம்பிக்கை கொண்டவர்களே கொலை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவங்களில் தொடர்பில்லாத பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதேபோன்ற சம்பவம் ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் மனைவி தனது கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்று.கணவர் தூக்குப்போட்டு இறந்ததாக குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார்.இறுதியாக, போலீசார்  தலையிட்டதால் உண்மை தெரிய வந்து சிறைக்கு  சென்றுள்ளார்.

காதலனுடன் சேர்ந்து  கணவனை கொலை செய்த மனைவி ஆந்திர மாநிலம் ஏலுரூ மாவட்டம் வெமுலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த  ஆசிர்வாதம் மற்றும் சுமலதா கணவன் – மனைவியாக வசித்து வந்தனர். இந்நிலையில் சுமலதா சில ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த  நாகராஜு என்பவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவை தொடர்ந்து வந்தார். இவர்கள் உறவுக்கு  கணவர் ஆசிர்வாதம் தடையாக இருப்பதாக நினைத்தனர்.

காதலனுடன் சேர்ந்து  கணவனை கொலை செய்த மனைவி இதற்காக எப்படியாவது ஆசிர்வாதத்தை கொன்றுவிட வேண்டும் என்பதில் இருவரும் முடிவு செய்தனர். இதற்காக இந்த மாதம் 1 ஆம் தேதி இரவு சாப்பாட்டில்  கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்கிய பின்னர் திட்டப்படி  நள்ளிரவில் சுமலதா தனது காதலன் நாகராஜுவை வீட்டிற்கு வரவழைத்து கழுத்து நெரித்து கொலை செய்தனர். பின்னர் இருவரும்  சேர்ந்து ஆசிர்வாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு சுமலதா போன் செய்து கூறினார்.

இதை உண்மை என நம்பிய குடும்பத்தினரும் நாகராஜின் உடல் தகனம் செய்ய  ஏற்பாடு செய்தனர். ஆனால் தகனம் செய்வதற்கு முன் ஆசிர்வாதம் உடலை  குளிப்பாட்டும் போது ​​உடலில் காயங்கள் இருப்பதை  பார்த்த ஆசிர்வாதம் பெற்றோர் மருமகள் சுமலதாவிடம் கேட்டனர்.ஆனால் அப்போது ஏற்கனவே கணவரை இழந்த துக்கத்தில் உள்ளதாக மாமியார் மற்றும் உறவினர்களிடம் கூறி கதறி அழுதார்.  வேறு எதுவும் செய்ய முடியாததால்,குடும்பத்தினர் ஆசிர்வாதம் உடலை அடக்கம் செய்தனர்.

ஆனால் ஆசிர்வாதத்தின் மரணத்தை தாங்க முடியாத அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருமகள் சுமலதாவிடம்  விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரனாக கூறியதால் தர்மாஜிகுடம் காவல் நிலையத்தில் கடந்த 3ஆம் தேதி புகார் அளித்தனர்.  இதனையடுத்து போலீசார் தங்களுக்கு உரிய ஸ்டைலில் விசாரித்தபோது  சுமலதா தனது கணவர் ஆசீர்வாதத்தை காதலன் நாகராஜுடன் சேர்ந்து கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசீர்வாதத்தின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.  இதையடுத்து, சுமலதாவை கைது செய்த போலீசார், அவரது காதலன் நாகராஜை தேடி வருகின்றனர்.

MUST READ