ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நகேந்திரனை செம்பியம் தனிப்படை போலிசார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, வழக்கறிஞர் அருள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்பவர் போலிசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் வடசென்னை ரவுடி நாகேந்திரனின் மகனான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை போலிசார் கைது செய்தனர். தற்போது ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி நாகேந்திரன் செம்பியம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கு ஒன்றில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக செம்பியம் போலிசார் கைது செய்துள்ளனர்.
போலிசாரின் விசாரணையில் ரவுடி நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் பார் கவுன்சில் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.