spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

-

- Advertisement -

ஆவடியில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்திய வாலிபர் போக்சோ தடுப்பு சட்டத்தில் கைது
ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைதுஆவடி காவல் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அஜித் (25), என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, ஓராண்டாக ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

we-r-hiring

கடந்த 26 ம் தேதி, சகோதரியின் வயிற்று வலிக்கு சோடா வாங்கி வருவதற்காக சிறுமி கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அஜித், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சேலத்திற்கு கடத்தி சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் சிறுமியின் தாய் திருமுல்லைவாயில் போலீசாரிடத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

இது குறித்து விசாரித்த தனிப்படை போலீசார், சேலம், தலைவாசல் டோல் பிளாசாவில் வாகன சோதனையின் போது, இருவரையும் மடக்கி பிடித்து ஆவடி மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

விசாரணையில், சிறுமியை கடத்தி சென்ற அஜித், சேலத்தில் உள்ள நண்பன் வீட்டில் தங்க வைத்து, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அவரை போக்சோ தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கம்பம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல்… 3 இளைஞர்கள் பலி!

MUST READ