spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பாஜக பெண் நிர்வாகியின் விபரீத முடிவு...அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது!

பாஜக பெண் நிர்வாகியின் விபரீத முடிவு…அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது!

-

- Advertisement -

பாஜக பெண் நிர்வாகியின் விபரீத முடிவு...அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது!

பாஜக பெண் நிர்வாகியின் விபரீத முடிவு…அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது.போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!

முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு பாஜக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக பாஜக மாவட்ட செயலாளரை தண்டையார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

we-r-hiring

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மெயின் தெருவைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி நவமணி.

இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் S. R. செந்தில் என்பவர் பெற்று கொண்டு இரயில்வே நிலையத்தில் கடை வைத்து தருவதாக கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கடையும் வைத்து தராமல் பணத்தையும் திரும்ப தராமல் இருந்துள்ளார்.

பெரும்புதூரில் கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

ஒரு கட்டத்தில் நவமணி பணத்தை திரும்பி கேட்கவே செந்தில் தர மறுத்து பிரச்சனை செய்ததாக தெரிய வருகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நவமணி தன்னுடைய தற்கொலைக்கு காரணம் செந்தில் தான் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரை கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் வீட்டிலிருந்தவர்கள் நவமணியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வண்ணாரப்பேட்டை சஞ்சீவி ராயன் தெருவில் வசித்து வரும் SR செந்திலை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ