spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மூதாட்டி உயிரிழப்பு – கிளினிக்குக்கு சீல் வைப்பு

மூதாட்டி உயிரிழப்பு – கிளினிக்குக்கு சீல் வைப்பு

-

- Advertisement -

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே முத்துகிருஷ்ணபேரி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தனியார் கிளினிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.மூதாட்டி உயிரிழப்பு – கிளினிக்குக்கு சீல் வைப்புசரவணகுமார்  என்பவா் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் கிளினிக் தொடங்கியுள்ளார். அந்த கிளினிக்கிற்கு பலரும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். இந்நிலையில் சுப்பம்மாள் (67) என்ற மூதாட்டி சரவணக்குமாாின் கிளினிக்கிற்கு சிகிச்சை பெற சென்றுள்ளாா். திடீரென சுப்பம்மாள் இறந்ததாக கூறியதால், அவரது உறவினா்கள் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். அவா்கள் அளித்த புகாாின் அடிப்படையில் போலீசாாா் விசாரணை மேற்க்கொண்டு வருவதோடு, கிளினிக்கிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனா்.

ஆவடி பேருந்து முனையம் தற்காலிகமாக இடமாற்றம்!!

MUST READ