spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆள் மாறாட்டம் செய்து 80 லட்சம் மதிப்பீட்டில் சொத்தினை விற்பனை செய்த பாஜக நபர் கைது

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்சம் மதிப்பீட்டில் சொத்தினை விற்பனை செய்த பாஜக நபர் கைது

-

- Advertisement -

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்சம் மதிப்பீட்டில் சொத்தினை விற்பனை செய்த பாஜக நபர் கைது

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்சம் மதிப்பீட்டில் சொத்தினை விற்பனை செய்த பாஜக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

we-r-hiring

சென்னை கிண்டி, மடுவாங்கரையைச் சேர்ந்த மொகிதீன் பாத்திமா பீவி, (58) என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.

அந்த புகாரில் ”கொரட்டூர் கிராமம், கள்ளிக்குப்பம், ஹாஜி நகரில் எனக்கு சொந்தமான 2347 சதுர அடி நிலம் இருந்தது. இந்நிலையில், பத்மநாபன் என்பவர், நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு, என்னை போல் ஆள்மாறாட்டம் செய்து போலியான பொது அதிகார பத்திரம் தயார் செய்துள்ளார்.

அதன் வாயிலாக, பாலகிருஷ்ணன், பிரபு, வேலு ஆகியோருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

அதன் மதிப்பு 80 லட்சம் ரூபாய் ஆகும். எனவே, நில மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், செங்குன்றம், சோலை மாநகரைச் சேர்ந்த பத்மநாபன்(49) என்பவரை கைது செய்தனர். பா.ஜ.க. கட்சி பிரமுகரான பத்மநாபன், சோழவரம் தெற்கு ஒன்றிய தலைவராக இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

MUST READ