spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயன்ற பாஜக நிர்வாகி கைது

ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயன்ற பாஜக நிர்வாகி கைது

-

- Advertisement -

திருப்பூர் மாநகராட்சி ஸ்ரீநகர் முக்கிய வீதியில் துரை என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் (HITACHI) தனியார் ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது. அதை கடந்த 20 ஆம் தேதி ஹாலோ பிளாக் கல் கொண்டு உடைத்து அதிலிருந்து பணத்தை திருடவும் முயற்சி செய்தது தெரிய வந்தது.

ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயன்ற பாஜக நிர்வாகி கைதுஇது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருப்பூர் அவிநாசி கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (54) என்பவரை கைது செய்தனர்.

we-r-hiring

இவர் ஹாலோ பிளாக் கல் கொண்டு 55 ஆயிரம் மதிப்புள்ள இயந்திரத்தை உடைத்து சேதப்படுத்தியும் பணத்தை திருடவும் முயற்சி செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட முருகானந்தம் பாஜக கட்சியின் திருப்பூர் மாவட்ட பிரச்சாரணி செயலாளராக உள்ளார்.

MUST READ