Homeசெய்திகள்க்ரைம்வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை திருட்டு

-

- Advertisement -

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்Cuddalore செல்வராஜ் மற்றும் இவரது மனைவி வளர்மதி இரண்டு பேரும் வெயிலின் தாக்கத்தால் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன் பக்க வாசலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை திருட்டு

இந்த நிலையில் இன்று காலை எழுந்து பார்த்த பொழுது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகை 3 லட்சம் ரொக்க பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

https://www.apcnewstamil.com/news/crime-news/two-arrested-in-chennai-for-kidnapping-and-extortion/89297

இது குறித்து வளர்மதி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராமப் பகுதியில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ