கல்லூரிக்கு செல்லும்போது நடுரோட்டில் வழிமறித்து விரட்டி, விரட்டி மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த கார் டிரைவரை அண்ணாநகர் காவல்துறையினா் கைது செய்தனர்.சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கொடுத்துள்ள புகாரில், தாம் அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், கடந்த 2 மாதமாக ஒரு வாலிபர் என்னை பின்தொடர்ந்து கல்லூரிக்கு செல்லவிடாமல் நடுரோட்டில் வழிமறித்து விரட்டி, விரட்டி டார்ச்சர் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
பலமுறை எச்சரித்தும் மீண்டும் என்னை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்துவருகிறார். அதுமட்டுமல்லாமல், காதலிக்க மறுத்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். ஆபாசமாக பேசுகிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில உள்ளேன். என்னால் சரியாகக் கூட படிக்க முடியவில்லை. எனவே எனக்கு டார்ச்சர் கொடுக்கும் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்
இதன் அடிப்படையில், கல்லூரி மாணவிக்கு டார்ச்சர் கொடுத்து வந்த கார் டிரைவர் ராஜராஜன்(35) என்பவரை காவல்துறையினா் கைது செய்தனர். இவருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து 2 வருடம் ஆகியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். இதையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவல்துறையினா் புழல் சிறையில் அடைத்துள்ளனா்.
குடும்பத் தகராறில் தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்…